தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

Photo of author

By Selvarani

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! உடன்பிறப்புகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உடன்பிறப்புகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சகாயஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் சகோதர சகோதரிகள் மூலம் சில நன்மைகளை பெறுவீர்கள். நிதிநிலைமை அதி அற்புதமாக உள்ளது.

அரசியல்வாதிகளுக்கு அதி அற்புதமான நாள். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் எல்லா காரியங்களையும் அருமையாக செய்து முடித்து மேல் அதிகாரிகளையும் நிர்வாகிகளையும் கவர்வதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்க்கும் சலுகைகளையும் பெறுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் அதிரடி நுணுக்கங்கள் மூலம் சில நன்மைகள் நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமான பாதையில் பயணிக்கும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில அனுபவமிக்க ஆலோசனைகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சேராக இருப்பதற்கு ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.