தனுசு – இன்றைய ராசிபலன்! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

0
185
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு – இன்றைய ராசிபலன்! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு நீங்கள் எதிர்பார்க்கும் படி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து செல்வது நல்லது.

 

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். சிலருக்கு கேட்டிருந்த கடன் உதவிகள் வந்து சேரும்.

 

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு உற்சாகம் தரும் தகவல் ஒன்று வந்து சேரும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ சீரடி சாய்பாபாவை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleவிருச்சகம் – இன்றைய ராசிபலன்! உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!
Next articleமகரம் – இன்றைய ராசிபலன்!! அலைச்சல் கூடும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here