தனுசு – இன்றைய ராசிபலன்! எண்ணிய செயல்கள் வெற்றியடையும் நாள்!!

0
54
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு – இன்றைய ராசிபலன்! எண்ணிய செயல்கள் வெற்றியடையும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எண்ணிய செயல்கள் வெற்றியடையும் நாள். நிதி அதி அற்புதமாக வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

 

உத்தியோகத்தில் இருந்து வந்த வேலை பளு கண்டிப்பாக குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எண்ணிய செயல்கள் வெற்றியடையும் நாள். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சிலர் அனுகூலமான நன்மைகள் வந்து சேரும்.

 

அரசியல்வாதிகள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான பாதையில் பயணிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதில் இருக்கும் அன்பர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.