தனுசு! இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

தனுசு! இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!!

Selvarani

தனுசு! இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குருபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சங்கடம் அளிக்கும். ஆகையால் சிந்தித்து செயல்படுவது நல்லது. நிதி தடை தாமதங்கள் ஆகலாம்.

கணவன் மனைவியிடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் கூடுமானவரை அனுசரித்து செல்வது அவசியம். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்கள் வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக வீண் அலைச்சல்கள் வந்து சேரும்‌. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒரு வித குழப்பம் அச்சம் செயல்படும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சிறு சிறு பிரச்சனைகள் எழலாம். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த நண்பர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நேரமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.