தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

0
209
#image_title

தனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். சுப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் ஒரு சிறு தூர பயணம் ஆவது வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை வரும் வாய்ப்புகள் உண்டாக்கலாம். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியே ஒற்றுமை அனுகூலமாக உள்ளது.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக சில பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஆற்றலுடன் செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் சென்று வருவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உற்றார் உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சில விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சில பயணங்களை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் அருமையாக நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..