தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிரடியாக குறையவிருக்கும் சம்பளம்:! மத்திய அரசின் புதிய திட்டம்!!

0
114

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அதிரடியாக குறையவிருக்கும் சம்பளம்:! மத்திய அரசின் புதிய திட்டம்!!

மத்திய அரசு வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதியை அமல்படுத்தவுள்ளது. இதனால் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் குறையும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களின் ஊதியப் பட்டியலை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்படுவதன் காரணமாக தற்போது,தனியார் ஊழியர்கள் கையில் வாங்கும் மாதச்சம்பளம் குறையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய விதியின் படி கிராஜூவிட்டி அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது. இதனால்
கிராஜூவிட்டியுடன்,பி.எஃப்-ம் அதிகரிக்கும் கூடும். பி.எஃப் -ம் அதிகரிப்பினால் வருங்கால திட்டங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசின் இந்த புதிய விதிமுறைகளை ஒரு சில தரப்பினர் ஆதரவும்,மற்றொரு தரப்பினர் வாங்கும் மாதச் சம்பளம் குறைவதால் செலவுக்கு நெருக்கடி ஏற்படும் என்றும் எதிர்ப்பினையும் தெரிவிக்கின்றனர்.

 

Previous articleகமல் கூட்டணி விவகாரம் எடுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்! தூக்கிப்போட்ட ஸ்டாலின்!
Next article8-ம் வகுப்பு மாணவியை 10-ம் வகுப்பு மாணவர்கள் சீரழித்த கொடூரம்!