தமிழக ரேஷன் கடைகளில் 26,000 வரை சம்பளம்!!விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!!

Photo of author

By Jeevitha

தமிழக ரேஷன் கடைகளில் 26,000 வரை சம்பளம்!!விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!!

Jeevitha

Salary up to 26,000 in Tamil Nadu Ration Shops!!This is the last date to apply!!

Tamil Nadu Government: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,280 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க வரும் 7ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளை பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகிறது. இந்த ரேஷன் கடைகளில் சேல்ஸ்மேன், கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தமாக 3,280 பணியிடங்கள் உள்ளன. இந்த நிலையில் பணியிடங்களுக்கான, விண்ணப்பிக்க வரும் 7ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான தேர்வு முறை என்பது தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான வயது 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும் ஆதிதிராவிடர்,  அருந்ததியர்,  பழங்குடியினர்,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ,சீர்மரபினர்,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது.

சேல்ஸ்மேன் பணிக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.6,250 வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு பிறகு ரூ.8,600 முதல் 29,000 வரை வழங்கப்படும். மேலும் கட்டுனர் பணிக்கு முதல் ஆண்டில் ரூ.5,500 மேலும் ஒரு ஆண்டு கழித்து ரூ.7,800 முதல் 26,000 வரை கிடைக்கும். மேலும் https://www.drbchn.in/ என்ற இணையதளத்தில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம். இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.