1000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனை ஆரம்பம்! POCO நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதோ! 

Photo of author

By Sakthi

1000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனை ஆரம்பம்!! POCO நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு இதோ!!
போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள POCO M6 Plus 5ஜி மொபைலின் விற்பனை இன்று(ஆகஸ்ட்5) முதல் தொடங்குவதாகவும் மேலும் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் என்றும் போக்கோ நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போக்கோ நிறுவனம் சமீபத்தில் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதையடுத்து இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அதாவது இன்றுமுதல் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் இன்று(ஆகஸ்ட்5) POCO M6 Plus 5ஜியின் விற்பனை தொடங்கியுள்ளது. அதன்படி இந்த POCO M6 Plus 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் பற்றியும் விலை பற்றியும் பார்க்கலாம்.
POCO M6 Plus 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்…
* போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மிஸ்டி லாவண்டர், ஐஸ் சில்வர், கிராப்பைட் பிளாக் ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கின்றது.
* இந்த ஸ்மார்ட்போனில் சைட் பவர் பட்டனுடன் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கின்றது. இதன் மூலமாக விரைவாக ஆசஸ் செய்ய முடியும்.
* போக்கோ எம்6 பிளஸ் 5 ஜி ஸ்மார்ட்போனின் டைமென்சன் 168.6×76.28×8.3mm ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 205 கிராம் எடை கொண்டுள்ளது.
* போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட் வசதியுடன் வருகின்றது.
* போக்கே எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஹைப்பர் ஓஎஸ் ஆண்ட்ராய்டு 14 ஸ்கின் அமைக்கப்பட்டுள்ளது.
* போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.79 இன்ச் புல் ஹெஸ்டி டிஸ்பிளேயுடன் 120 ஹெச் ஜெட் ரெப்ரஸ் ரேட்டும் கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 2400×1080 பிக்சல் வசதியும் உள்ளது.
* டிஸ்பிளே பாதுகாப்புக்காக போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 3 அமைக்கப்பட்டுள்ளது.
* போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 108 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன் 3எக்ஸ் இன் சென்சார் ஜூம் மற்றும் 2 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
* செல்பி எடுப்பதற்காகவே முன்பக்கத்தில் 13 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமராவும் போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.
* போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 5030 எம்ஏஹெச் பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 33வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
* போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பெயரிலேயே இது 5ஜி நெட்வொர்க் கொண்ட ஸ்மார்ட்போன் என்று போக்கோ தெரிவித்துவிட்டது. மேலும் 4ஜி எல்டிஇ டியை பேண்ட் ஃவைபை, 3.5 எம்.எம் ஆடியோ ஜேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
* புதிய போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் வசதியுடனும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் என்று இரண்டு வகைகளில் கிடைக்கின்றது. மேலும் 8 ஜிபி ரேம் கொண்ட போக்கோ எம்6 பிளஸ் ஸ்மார்ட்போனில் கூடுதலாக 8 ஜிபி ரேம் நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
* விலையை பொறுத்துவரை 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் வேரியண்ட் விலை 11999 ரூபாய்க்கும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் வேரியண்ட் விலை 13499 ரூபாய்க்கும் கிடைக்கின்றது.
* 1000 ரூபாய் தள்ளுபடி வேண்டும் என்றால் பிளிப்கார்ட் தளத்தில் எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ பேங்குகளின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக வாங்கும் போது 1000 ரூபாய் தள்ளுபடியை பெறலாம்.