நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையை தகர்த்த திமுக!

Photo of author

By Sakthi

நாமக்கல், சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக தொகுதிகளில் திமுக வெற்றியை ருசித்திருக்கிறது. அதோடு சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.

சேலம் மாநகராட்சியில் இதுவரையில் 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. 1 இடத்தில் மட்டுமே அதிமுக வெற்றி வாய்ப்பை தொட்டுப் பார்த்திருக்கிறது.

அதே போல சேலம் மாவட்டத்திலிருக்கின்ற ஆத்தூர், மேட்டூர், நரசிங்கபுரம், எடப்பாடி, இடங்கணசாலை, தாரமங்கலம், உள்ளிட்ட 6 நகராட்சிகளிலும் அதிகமான வார்டு கவுன்சிலராக திமுகவை சார்ந்தவர்கள் வெற்றி வாகை சூட்டியிருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகராட்சியில் இதுவரையில் 3 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. அதிக வார்டுகளில் திமுக முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருச்செங்கோடு நகராட்சியில் திமுகவும், அதிமுகவும் சமநிலையில் வெற்றி பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதை தவிர குமாரபாளையம், பள்ளிபாளையம், நகராட்சியில் இதுவரையில் முடிவுகள் வெளியானதில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியிருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல நாமக்கல் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளில் ஆளும் கட்சியான திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் சேலம் மாவட்டத்தில் திமுகவும் நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சில தொகுதிகள் அதிமுகவின் செல்வாக்கு மிக்க இடங்களாக கருதப்பட்ட பகுதிகளிலும் கூட தற்சமயம் ஆளும் கட்சியான திமுக அதிக அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.