நவம்பர் 1 சேலம் மாவட்ட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று 159 வது சேலம் மாவட்டம் தினம் ஆகும்.
இந்தியாவில் மொத்தம் இன்று வரை 787 மாவட்டங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவின் முதல் மாவட்டம் எது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம் சேலம் தான் இந்தியாவின் முதல் மாவட்டம் .
இந்தியாவின் முதல் மாவட்டமாக சேலம் 1792 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது திப்பு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பாக சேலம் மாவட்டம் இருந்தது. ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியினால் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு, சேலத்தின் நிலப்பரப்புகள் ஆங்கிலேயர்கள் வசம் சென்றது.
இப்போது உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி,நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்கள் ஒன்றாக சேலம் மாவட்டமாக உருவாக்கினார்கள் ஆங்கிலேயர்கள்.மொத்தம் 7 ஆயிரத்து 530 சதுர கிலோமீட்டர்கள் சேலம் மாவட்ட நிலப்பரப்பாக இருந்து இருக்கிறது. அலெக்சாண்டர் ரீட் என்பவர் 1792 முதல் 1799 வரை மாவட்ட ஆட்சியராக இருந்தார் .
சேலம் நகராட்சி 1866 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்று அன்று ஆங்கிலேயர்களால் சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது.எனவே நவம்பர் ஒன்று சேலம் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று 158 வது சேலம் தின நாளாக உள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்திற்கு அடுத்ததாக அதிக கனிம வளம் கொண்ட மலைகளை கொண்டது சேலம் மாவட்டம் .
மேலும், நெசவு, விவசாயம், மேட்டூர் அணை, மாம்பழம், வெள்ளி பொருட்கள், ஏற்காடு மலை என பலவற்றில் சிறப்பு மிக்க மாவட்டமாக சேலம் மாவட்டம் உள்ளது. சிற்பகலைகளுக்கு எடுத்துக்காட்டாக தாரமங்கலம் சிவன் கோவில் உள்ளது.