திருச்சியிலிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது சமயபுரம் என்ற ஊர் பெயரோடு சேர்த்து சமயபுரம் மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறார். கண் நோய் தீர்க்கும் சிறப்புமிக்க தலமாக இந்த தலம் விளங்கி வருகிறது.
வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்மனை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது, உள்ளிட்டவை இங்கு முக்கியமான நேர்த்திக்கடனாக இருந்து வருகின்றனர்.
மாசி மாதத்தில் இங்கே நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது என்று சொல்கிறார்கள். அதேபோல சித்திரை மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பிரபலமடைந்தது என சொல்லப்படுகிறது.
வருடம் தோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையில் தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதை பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரள்வார்கள். இந்த ஆலயத்தின் தலவிருட்சம் வேம்பு என சொல்லப்படுகிறது.