DMK MNM: திமுகவின் தலைமை கழக பேச்சாளரும் திரைப்பட இயக்குனருமான கரு.பழனியப்பன் திமுகதான் விஜய்க்கு அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும், அதனால் நான் எந்த மேடையிலும் விஜய்யை விமர்சிப்பது கிடையாது என பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
புதிதாக கட்சி தொடங்கிய விஜய் ஹிந்தியை எதிர்த்து தானே அரசியல் செய்கிறார். அதையே தான் நாங்களும் செய்கிறோம் எங்களுடன் வந்து நிற்க வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பினர். புது பொருள் விற்றல் தான் தனி கடை போட முடியும் என்றும், நான் விஜய்யை விமர்சிக்க விரும்பவில்லை, ஏனென்றால் திமுக எதிர் காலத்தில் விஜய்க்கு ராஜ்யசபா சீட் தர வேண்டிய நிலை வரும், ஏனென்றால் அவர் திமுகவிற்கு வந்து விடுவார் என்றும் விமர்சித்திருந்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், கமலுக்கும் தான் ஆசை இருந்தது. கட்சி தொடங்கிய போதே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டையும் எதிர்த்தார். ஆனால் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார். பின்பு கமலுக்கு திமுக ராஜ்யசபா சீட் வழங்கியது, இதை தான் வைத்து கரு.பழனியப்பன் சூசகமாக சொல்கிறார் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருக்கும் சிநேகனிடம் கேட்ட போது, தகுதி, தராதரம் பார்த்து தான் ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த விவகாரத்தால் கமலுக்கும், திமுகவிற்கும் இடையே சலசலப்பு நிலவும் என்றும் சொல்லப்படுகிறது.