Samosa Recipe in tamil: பொதுவாக அனைவருக்கும் சமோசா என்றால் பிடிக்கும். மாலை நேரத்தில் சூடான டீ, காபியுடன் இந்த காரசாரமான சமோசாவை வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் இந்த சமோசா செய்வதற்கு மிகுந்த சிரமாக இருக்கும் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் சமோசா செய்ய தேவையான பொருட்கள தயார் செய்து வைத்துக்கொண்டால் உடனடியாக செய்து (samosa seivathu eppadi) முடித்துவிடலாம்.
தேவையான பெருட்கள்
- கோதுமை மாவு
- வெங்காயம் – 1 (நறுக்கியது)
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
- வேகவைத்த உருளை கிழங்கு
- மிளகாய் தூள் – 1ஸ்பூன்
- கரம்மசாலா-1ஸ்பூன்
- மஞ்சள் தூள் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் சப்பாதிக்கு மாவு பிசைவது போல பிசைந்து அதனை ஒரே வட்ட வடிவமாக தேய்த்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை தோசைக்கல்லில் இருபுறமும் திருப்பி போட்டு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கு, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது சமோசா ரோலை எடுத்து ஒரே வடிவமாக நான்கு பகுதியாக வெட்டி அதில் ஒரு பகுதியை சுருள் போல் சுருட்டி தயார் செய்து வைத்துள்ள மசாலாவை அதில் வைத்து மடித்து ஓரங்களில் கோதுமை மாவு கரைத்த நீர் சேர்த்து மூட வேண்டும்.
இப்பொழுது சூடாக உள்ள எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான சமோசா தயார்.
மேலும் படிக்க: கோதுமை மாவு இருந்தா போதும் செம டேஸ்டான சிம்பிளான அல்வா செய்யலாம்..!!