அமைச்சர் உதயநிதி மீதான சனாதன வழக்கு! உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

கடந்த ஆண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது பல மாநிலங்களில் இருந்து தொடரப்பட்ட சனாதன வழக்கு தொடர்பாக தற்பொழுது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “டெங்கு, கொசு, கொரோனா போன்ற தொற்றுக்களை அழிப்பது போலவே சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் அரசியல் தலைவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.

அது மட்டுமில்லாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது பல மாநிலங்களில் இருந்தும் வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து அந்த வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி தொடர்ந்த வழக்கில் இன்று(ஆகஸ்ட்14) உச்சநீதிமன்றம் முக்கியமான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மீதான சனாதனவழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்த பொழுதே நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா இருவரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கண்டித்து வழக்கை தள்ளி வைத்தனர். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்14) மீண்டும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அவர்களின் முன் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து விசாரணை நடத்திய நீதிபதிகள் “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை விசாரிக்கும் பொழுது அனைத்து வழக்குகளையும் ஒன்றிணைக்க முடியாது. மேலும் இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஒரே வழக்காக மாற்ற முடியாது.

வேண்டுமானால் பிற மாநிலங்களின் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றலாம். இந்த சனாதன வழக்கு தொடர்பாக பிற. மாநிலங்களில் நடைபெறும் வழக்குகளில் அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்ற தேவை இல்லை.

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மீது சனாதன வழக்கு தொடர்ந்த அனைவரும் வருகின்ற நவம்பர் 18ம் தேதிக்குள் பதில் மனு அளிக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.