திருமணம் கை கூட சித்திரை மாத சதுர்த்தி விரததத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும்?

Photo of author

By Sakthi

மனிதர்களைப் பொறுத்த வரையில் நாள்தோறும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.ஆனால் சில மனிதர்கள் அதனை தன்னுடைய புத்தி சாதுரியம் காரணமாக, மிகவும் எளிதாக முறியடித்து விடுகிறார்கள்.

ஆனால் பல மனிதர்கள் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.அதோடு தங்களுடைய வாழ்க்கையில் நன்மை என்பதே நடைபெறாதா? என்ற சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

யோசிக்குமாற்றல் இருக்கும் மனிதர்கள் தங்களுடைய புத்திசாதுர்யத்தை கொண்டு தங்களுக்கான நன்மைகளை தாங்களே நடத்திக் கொள்கிறார்கள். ஆனால் யோசிக்க தெரியாத பலர் இன்னமும் கடவுளை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.

அந்த வகையில், இன்று சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விரதமிருந்து எவ்வாறு விநாயகரை வழிபட்டால் எது போன்ற நன்மைகளை பெறலாம் என்பதை இங்கே நாம் தெரிந்து கொள்ளலாம்.

சித்திரை தேய்பிறை சதுர்த்தி தினம் அன்று அதிகாலையில் நீராடிவிட்டு உணவு எதுவும் சாப்பிடாமல் மாலை வரையில் விநாயகப் பெருமான் நினைவுடன் விரதமிருக்க வேண்டும். பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

மாலை சமயத்தில் அருகிலிருக்கின்ற விநாயகர் கோவில் சன்னதிக்கு சென்று விநாயகப் பெருமானை துதித்து அவருக்கு நடைபெறும் அபிஷேகத்திற்காக பசும்பால் வாங்கிக்கொடுத்து ஆராதனை பூஜையில் பங்கேற்று கொண்டு விநாயகரை வழிபட வேண்டும் என்கிறார்கள்.

அந்த வழிபாட்டை முடித்து விட்டு ஆலயத்தை 8 முறை சுற்றி வந்து விநாயகரை வணங்க வேண்டும். ஆலயத்தில் அனைத்து பூஜை வழிபாடுகளும் முடிவடைந்தவுடன் வீட்டிற்கு வந்து விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

சித்திரை மாத தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து அவரை வழிபடுவதால் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார நஷ்டம நிலை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. தம்பதிகளுக்குள் உண்டாகும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

நீண்டகால நோய்களால் அவதிப்பட்டு வருபவர்கள் நோய் பிடிகளிலிருந்து நீங்கி பூரண நலம் பெறுவார்கள். வேலை தேடி அலைந்து கொண்டு வருபவர்களுக்கு மிக விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மிக விரைவில் திருமணம் கைகூடும்.