என் வீட்டையே தரை மட்டமாக இடிச்சிட்டான் ஆர்யா!. பகீர் தகவலை சொன்ன சந்தானம்!..

Photo of author

By அசோக்

என் வீட்டையே தரை மட்டமாக இடிச்சிட்டான் ஆர்யா!. பகீர் தகவலை சொன்ன சந்தானம்!..

அசோக்

Updated on:

arya

ஆர்யாவுடன் பல படங்களில் நடித்தவர் சந்தானம்.  ராஜா ராணி, சேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், வி.எஸ்.ஓ.பி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். இந்த எல்லா படங்களிலுமே சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் ஹிட் அடித்தது. அதோடு, இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இப்போது சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை ஆர்யாதான் தயாரித்திருக்கிறார்.

இந்த பட விழாவில் பேசிய சந்தானம் ஆர்யாவால நான் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறேன். என்ன பல விஷயங்களில் மாட்டிவிட்டு விடுவான். ஒருமுறை ஒரு இடம் வாங்கி சிறியதாக ஒரு வீடு கட்டினேன். என் அம்மா வாரம் ஒருமுறை அங்கு சென்று விளக்கு ஏற்றி வந்தார். எனவே, அந்த வீட்டுக்கு குடி போய் விடலாம் என்கிற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். ஆர்யாவை அழைத்துகொண்டு போய் அந்த வீட்டை காட்டினேன். அதைப்பார்த்த ஆர்யா ‘வீட்டை சரியா கட்டல மச்சான். எல்லாமே தப்பா இருக்கு. வீட்ட இடிச்சிட்டு புதுசா கட்டலாம்’ என்றேன். நான் ஷாக் ஆகிவிட்டேன்.

ஆனால்,நான் சொன்னதை கேட்காமல் யாருக்கு போன் பண்ணினான். 3 நாட்களில் விட்டை இடித்து தரை மட்டம் ஆக்கிவிட்டான். எப்படி சொல்வது என தெரியாமல் என் அம்மாவிடம் இதை நான் சொல்லவில்லை. ஒருநாள் அங்கு போன என் அம்மா வீடே இல்லாததை பார்த்து ஷாக் ஆகிவிட்டார். இரண்டு தெருக்களில் அந்த வீட்டை தேடியிருக்கிறார். அதன்பின் நான் நேரில் சென்று ‘ஆர்யாதான்மா வீட்டை இடிச்சிட்டு வேறமாறி கட்டலாம்னு சொன்னான்’ என சொல்ல ‘நீங்க ரெண்டு பேரும் சினிமாவுலதான் இப்படி செய்வீங்கன்னா நிஜத்திலும் இப்படியாடா?. வீட்டை ஏன்டா இடிச்ச?’ என என்னை திட்டிவிட்டார்’ என பேசியிருக்கிறார்.