இரண்டாம் குத்துப்பட இயக்குனர் பாஜகவில்..?!

Photo of author

By Sakthi

இரண்டாம் குத்துப்பட இயக்குனர் பாஜகவில்..?!

Sakthi

சந்தோஷ் ஜெயக்குமார் அவர்களின் இயக்கத்தில் பி கிரேட் படத்தை போன்று உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான் இருட்டு-அறையில் முரட்டுகுத்து. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில், கௌதம் கார்த்திக் மற்றும் யாஷிகா ஆனந்த் சாண்டில்யா, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். அடல்ட் நகைச்சுவை பலவற்றை கொண்டு ரசிகர்கள் இடையே இளைஞர்களை கவர்வதற்காக வெளியான இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில் அந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதில் இப்படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் தான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போன்றவை சில தினங்களுக்கு முன்பு வெளியாகின.

அந்த இரண்டிலுமே ஆபாசத்தின் காட்சிகள் அதிகமாக இருக்கிறது, என்று சினிமா உலகில் இருந்து பலவிதமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. அதனால், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும், அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே வருவதால், இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறி இருப்பதாக தெரிகிறது.

அதனால், படக்குழுவினர் சோகத்தில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். சமூக வலைதளவாசிகளோ படம் வெளியாக வேண்டும் என்றால், பாஜகவில் இணைந்து விடுங்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.