சமூக அந்தஸ்தை கொடுக்கும் சசயோகம் யாருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்!

Photo of author

By Sakthi

சச யோகம் என்பது பஞ்ச மகா புருஷ யோகத்தில் மிகவும் முக்கியமானது. சனி பகவான் சஞ்சாரம் காரணமாக, இந்த சச யோகம் அமைகிறது. சச யோகம் அமைந்தால் அரசனுக்குச் சமமான வாழ்வு, சமுதாய அந்தஸ்து உள்ளிட்டவை ஏற்படும் என பண்டைக்காலச் சோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனிபகவான் துலாம், மகரம் மற்றும் கும்பம் உள்ளிட்ட வீடுகளில் அமர்ந்திருக்கின்ற நிலையில் அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி உள்ளிட்டவற்றுக்கு 1, 4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்கள் ஆக அமைந்திருந்தால் இந்த யோகம் உண்டாகிறது.

அந்த நிலையில், சூரியன், செவ்வாய், உள்ளிட்ட கிரகங்களுடன் சனி சேர்ந்து அமராமலிருந்தால் இந்த யோகம் நல்ல பலன்களைத் தரும் என்பது ஜோதிட வல்லுனர்கள் கருத்து எனப்படுகிறது.

சச யோகத்தில் பிறந்தவர்கள் அரசு அதிகாரம், தலைமை பண்புகள், நல்ல வேலையாட்கள், செல்வம், உள்ளிட்டவற்றை கொண்டவர்கள் பொது மக்களிடையே உள்ள செல்வாக்கு காரணமாக, ஒரு கிராமம் அல்லது நகரத்திற்கு தலைவராக பதவி வகித்து வருவார்கள். தன்னை பெற்ற தாயிடம் எப்போதும் பணிவாக நடந்து கொள்வார்கள் மத்திய அளவில் உயரம், கருப்பான நிறம் கொண்டவர்களுக்கு 70 வயதிற்கு மேல் ஆயுள் என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான உழைப்பு காரணமாக, வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைவார்கள். நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு, உள்ளிட்டவற்றை குடும்பத்திற்காக சேர்த்து வைப்பார்கள். இந்த யோகம் கொண்டவர்கள் சட்டத்திற்குட்பட்டு வருமானம் ஈட்டுபவர்களாக இருந்தாலும் தன்னை நம்பியவர்களுக்கு உண்மையுடன் செயல்படும் துணிச்சல் கொண்டவர்கள் என சொல்லப்படுகிறது.

இந்த யோகமானது முழுமையாக செயல்பட வேண்டுமானால் சனிபகவான் கேந்திரத்தில் தனித்து சுப அல்லது அசுப பார்வை, சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும்.

சசயோகம் பெறுவது மிகவும் அரிது சனி பகவான் 12 ராசியை கடப்பதற்கு 30 ஆண்டுகாலம் தேவைப்படுகிறது. இதில் துலாம், மகரம், கும்பம், உள்ளிட்ட மூன்று ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்தில் பிறந்தால் மட்டுமே இந்த யோகம் கிடைக்கும். சச யோகத்தில் பிறந்தவர்களுக்கு ஆயுளை தீர்க்கமாக வழங்கிவிடுவார் சனிபகவான்.

இந்த யோகம் மிகவும் அரிது என்பதால் இது பஞ்ச மகா புருஷ யோகம் கும்ப ராசியில் சஞ்சரிக்கப் போகும் சனிபகவான் காரணமாக இந்த ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் பிறக்கும் குழந்தைகள் பலருக்கு பஞ்ச மகா புருஷ யோகம் ஆன சச மகா யோகம் அமையவிருக்கிறது.

சனிபகவான் ஒருவருடைய ஜாதகத்தில் மேஷ லக்னத்திற்கு 7, 10, உள்ளிட்ட இடங்களில் அமர்ந்திருந்தால் மற்றும் ரிஷபத்தில் இருந்தால், கடகத்திற்கு 4, 7ல் இருந்தால், துலாம் ராசிக்கு லக்னம் மற்றும் 4ல் இருந்தால், கும்பத்திற்கு லக்னத்தில் இருந்தால் அது சசயோகம் என சொல்லப்படுகிறது.

மகரத்திற்கு ராசிநாதன் 10ம் இடமான துலாம் ராசியில் இருந்தால் அது சசயோகம் மகரத்திற்கு 10ம் இடத்தில் தனித்து எவர் சேர்க்கை, பார்வை உள்ளிட்டவை பெறாமல் உச்சம் பெறும் சனி பகவான் முழுமையான சசயோகம் தரவிருக்கிறார் என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.