கர்நாடகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து வந்த சசிகாந்த் செந்தில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தபோது அந்த பகுதியிலேயே ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை.
இப்போது அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு இருக்கின்றார். அதோடு மாநிலத் துணைத் தலைவராகவும், இருக்கிறார். ஒரே நேரத்தில் கர்நாடகாவில் ஐஏஎஸ் ,மற்றும் ஐபிஎஸ், அதிகாரியாக இருந்தவர்கள் இருவேறு தேசிய கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு பயணம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.
அண்ணாமலை அவர்கள் பாரதிய ஜனதாவில் இணைந்த உடனேயே, அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டதை போல காங்கிரஸில் இணைந்த சசிகாந்த் சிந்துவுக்கு ஒரு புதிய பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
புதிய பதவி சம்பந்தமாகவும் ,அண்ணாமலை பாஜகவின் துணை தலைவராக இருப்பது சம்பந்தமாகவும், சசிகாந்த் செந்தில் பதிலளித்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் நான் இணைந்தபோது, எந்த ஒரு வேண்டுகோளையும் அந்த கட்சிக்கு நான் வைக்கவில்லை.
அதுபோல பதவி சம்பந்தமாக எனக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் கிடையாது. தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் கூட கிடையாது.
கட்சிக்காக நெடுங்காலமாக ,பணி செய்தவர்கள் தான் மேலே போக வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்காக பணிபுரிந்து, மதவாத சக்திகளை எழவிடாமல் செய்ய வேண்டும், என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருக்கின்றது.
பாரதிய ஜனதா என்பது தமிழ்நாட்டிலே இல்லாத ஒரு கட்சி. ஆகவே அங்கே யார் போய் இணைந்தாலும் உடனடியாக பொறுப்பு கொடுத்துவிடுவார்கள்.
ஆகவே தலைவர் பதவியைக் கூட அங்கே கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது. என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.