
TVK AMMK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், புதிய கட்சியாக தோன்றியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. திமுக அதிமுக கட்சியுடன் யார் இணைவார்கள் என்ற காலம் போய் விஜய் எந்த கட்சியுடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு, அதிமுக-பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார். அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகினால், கூட்டணி வைக்க சம்மதம் என்பது போல தகவல் வெளிவந்தது. இந்நிலையில் இபிஎஸ் யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத டிடிவி தினகரன், முதல்வராக வேண்டுமென்ற ஆசையில் இருக்கும் ஓபிஎஸ், எடப்பாடியை பழிவாங்க வேண்டுமென்று நினைக்கும் சசிகலா ஆகியோர் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. டிடிவி தினகரன், இப்போது பேசும்போதெல்லாம், அமமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் என்று உறுதியாக கூறி வருகிறார்.
NDA கூட்டணியிலிருந்து பிரிந்த தினகரன் மற்றும் ஓபிஎஸ் மீண்டும் அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை. திமுக அவர்களின் எதிரி என்பதால் அக்கட்சியுடனும் இணைய மாட்டார்கள். இப்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விஜய் தான். தினகரன் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காததால் விஜய் கூட்டணியில் இணைந்து அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று திட்டம் தீட்டி இருக்கிறாராம். ஆனால் ஓபிஎஸ் ஏற்கனவே முதல்வர் பதவியில் இருந்தவர், அதனால் இந்த கூட்டணியில் முதல்வர் சீட்டை அவர் கேட்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.