விடுதலையாக்கும் சசிகலா மகிழ்ச்சியில் ஆதரவாளர்கள்! அதிர்ச்சியில் தமிழக ஆளும் தரப்பினர்!

Photo of author

By Sakthi

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 வருட சிறை தண்டனை அடைந்து பெங்களூரு அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா அவர்களின் தண்டனை காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று காலை ஒன்பது முப்பது மணி முதல் காலை பத்து மணிக்குள் அவர் விடுதலை செய்யப்பட இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

இருந்தாலும் கடந்த 20ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்ட காரணத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு உண்டானது. இதனைத்தொடர்ந்து தற்சமயம் அவர் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். அவருடைய உடல்நிலை வெகுவாக முன்னேற்றம் கண்டு வருவதாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் சசிகலா தண்டனை காலம் முடிவுற்று அதிகாரப்பூர்வமாக சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.

சசிகலாவின் விடுதலைக்கு கர்நாடக மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துவிட்ட நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் இன்று காலை சுமார் பத்து மணிக்கு மேல் விக்டோரியா மருத்துவமனைக்கு போய் அங்கே சசிகலாவை சந்திக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது சசிகலா விடுதலை ஆகும் ஆவணங்களில் அவரிடம் கையொப்பம் வாங்கிக்கொண்டு சிறைக்கு திரும்புவார்கள் என்றும், இதனைத் தொடர்ந்து சசிகலா முறையாக சிறையில் இருந்து விடுதலையாகி விட்டார் என்றும் அர்த்தமாகும் எனவும், தெரிவிக்கப்படுகிறது.

சசிகலா விடுதலை ஆனபிறகு தற்சமயம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் காவல்துறை பாதுகாப்பு, மற்றும் காவல்துறை கண்காணிப்பு ,போன்றவை வாபஸ் பெறப்படும் சசிகலா முழுக்க முழுக்க அவருடைய குடும்ப உறுப்பினர்களும் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிகிறது. இனி வரும் காலங்களில் அவருக்கு உயர் தரமான சிகிச்சை அளிக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்து அவருக்கான சிகிச்சையை தொடரலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

சசிகலாவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு தயாராக இருக்கின்றன. ஆனால் சசிகலா முழுமையாக தொற்றிலிருந்து விடுபடவேண்டும். அதன் பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கும் பிரம்மாண்ட வரவேற்பு சசிகலாவிற்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள்.