எதிரிகளின் எண்ணம் பலிக்காது! சசிகலாவின் வருகை தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர்!

0
143

புரட்சித்தலைவர் எம்ஜிஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா, வழியில் அதிமுக அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்றும், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஒரு மாபெரும் சரித்திர வெற்றியை பெறும் என்றும்,அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

தலைநகர் சென்னை உட்பட நாடு முழுவதிலும் 8 நகரங்களில், இருந்து குஜராத்தில் இருக்கின்ற சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலையை இணைக்கும் 8 புதிய ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக ஆரம்பித்து வைத்தார். அந்த வகையில்,சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயகுமார் ,மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் போன்றோர் பங்கேற்றார்கள்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ,சசிகலாவின் வருகை அதிமுகவிற்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை சசிகலாவின் வருகையானது அதிமுகவிற்கு ஊறுவிளைவிக்கும் என்று ஒரு மாயையை சிலர் உருவாக்கி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டி இருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

அதோடு முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, மற்றும் எம்.ஜி.ஆர் போன்றோரின் வழியிலே அதிமுக அரசு நடந்து வருகின்றது எனவும் எதிர்வரும் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை தன்வசப்படுத்தும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

Previous articleதிமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்ட மோதல்! கூட்டணியில் சிக்கல் ஏற்படுமா?
Next articleகாங்கிரஸ் கட்சிக்கு அமித்ஷா எழுப்பிய அந்த கேள்வி! வாயடைத்துப் போன முக்கிய தலைவர்கள்!