தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், பல தரப்பினரும் இச்சம்பவத்தைக் கண்டித்து கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகிய இரண்டு எஸ்.ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பிற காவலர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
இதில் ஆய்வாளரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஜெயராஜின் குடும்பத்தினர், வியாபாரிகள், பல கட்சியைச் சேர்ந்தவர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சாத்தான்குளம் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் இடது கை செயலிழந்துள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்த நிலையில் இடது கை செயலிழந்தது தெரிய வந்தது. 2003-ல் விபத்து ஒன்றில் சிக்கிய போது ஸ்ரீதரின் முதுகு தண்டில் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.. ஆய்வாளர் ஸ்ரீதரின் இடது கை செயலிழந்தை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.