சனிப்பெயர்ச்சி 2025 – 2027..!! 12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் சனியின் நிலை..!!

நவகிரகங்களில் சனிபகவான் மட்டுமே ஈஸ்வரர் பட்டம் பெற்றவர். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக் கூடிய அனைத்து வித கர்மாக்களுக்கும் தலைவர். நம் வாழ்வில் முக்கியமான விஷயங்கள் – ஆயுள், தொழில், கர்மா.

இம்மூன்றிக்கும் அதிபதி அதாவது காரகன் சனியே ஆவார். ஒருவருடைய ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானாதிபதி பலம் குன்றியிருந்தாலும், சனீஸ்வர பகவான் பலமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று சொல்லலாம்.

சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற தொழில்கள்: உழைப்பு, சமூக நலம், தேச தொண்டு, புதையல், தலைமை தாங்கும் வாய்ப்பு, உலகியல் அறிவு, பல மொழிகளில் பாண்டித்யம், விஞ்ஞானத்தில் தேர்ச்சி, எண்ணைய் கிணறு, பெரிய இயந்திரங்கள் போன்றவற்றிற்கு காரகத்துவம் கொடுப்பவர்.

கிரக வரிசையில் ஆறாவதாக வருபவர். கிழமைகளில் சனிக்கிழமைக்கு ஆதிக்கம் செலுத்துபவர். அளவின் அடிப்படையில் குருவிற்கு அடுத்த பெரிய கிரகம் சனி கிரகமாகும்.
இந்த சனிப்பெயர்ச்சியானது பங்குனி மாதம் 15ம் நாள் (29.03.2025)இரவு 11:01 க்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார்.

மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார்.
மீன ராசிக்கு வரும் சனி பகவான் மேஷ ராசிக்கு ஸ்ரீபிலவங்க வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி – 03.06.2027 – வியாழக்கிழமையன்று மாறுகிறார்.மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார்.

சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.

பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:

நன்மை பெறும் ராசிகள்: மிதுனம் – கடகம் – துலாம் – மகரம்

நன்மை, தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: ரிஷபம்- விருச்சிகம்

பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: மேஷம் – சிம்மம் – கன்னி – தனுசு – கும்பம் – மீனம்

ஒவ்வொரு ராசியிலும் சனியின் நிலை:

நட்சத்திரம்        சனியின் நிலை
மேஷம்                    நீசம்
ரிஷபம்                     நட்பு
மிதுனம்                   நட்பு
கடகம்                       பகை
சிம்மம்                      பகை
கன்னி                      நட்பு
துலாம்                     உச்சம்
விருச்சிகம்            பகை
தனுசு                      நட்பு
மகரம்                     ஆட்சி
கும்பம்                   ஆட்சி
மீனம்                      நட்பு