வரப்போகிறது சனிப்பெயர்ச்சி(29.3.25)..!! வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காணப்போகும் நான்கு ராசிகள்..!!

Photo of author

By Janani

வரப்போகிறது சனிப்பெயர்ச்சி(29.3.25)..!! வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை காணப்போகும் நான்கு ராசிகள்..!!

Janani

ஜோதிடத்தில் சனி பகவானுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. சனிபகவான் ஒரு பாவ கிரகம் மற்றும் ஒரு கொடூரமான கிரகம் என்றும் அழைக்கப்படுகிறார். ஜோதிடத்தில் சனி பகவானின் மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாற்றிக் கொள்வார்.

அதன்படி வரும் மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜோதிட கணக்குகளின் படி சனிபகவானின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சில ஆண்டுகளாக அவர்கள் பெற்ற துன்பங்கள் அனைத்தும் குறையும். இவ்வாறு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் மாற்றம் நன்மையை பயக்கும் என்பது குறித்து காண்போம்.

மிதுனம்:

சனிபகவானின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமான பலன்களையே தரும். உங்கள் தொழிலில் நீங்கள் பெரும் வெற்றியை பெறுவீர்கள். வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். வேலைகளில் இருந்து வந்த அவப்பெயர் நீங்கி நல்ல பெயர் கிடைக்கும்.

நீங்கள் விரும்பிய முடிவுகளை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு கொண்டு இருந்த வேலைகள் நடக்கும். இத்தனை நாட்களாக பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கி மிதுன ராசியினர் மகிழ்ச்சியுடனும், வசதியுடனும் வாழ்வீர்கள். சமூகத்தில் மரியாதை உண்டாகும்.

சிம்மம்:

மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் சனி பகவானால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும். வரப்போகிற ஆண்டில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். நிதி நிலைமை வளர்ச்சி அடையும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். செல்வ செழிப்பும் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் இறைவழிபாட்டினை அதிகரித்தால் சனி பெயர்ச்சியின் கெட்ட தாக்கம் மிக குறைவாக இருக்கும். சமூக அந்தஸ்தும் உயரும்.

கன்னி:

கன்னி ராசியினருக்கு பெயர்ச்சியாகும் சனி பகவானால் தொழில் வளர்ச்சிக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். கன்னி ராசியினரின் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
நீங்கள் விரும்பிய துறைகள் அனைத்திலும் வெற்றியை பெறுவீர்கள். கன்னி ராசியினருக்கு செல்வம் பெருகும். பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி செல்வ உயர்வு கிடைக்கும். பிறரிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் சற்று கவனம் தேவை. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சியானது பலவிதமான நன்மைகளை கொடுக்கக் கூடியதாக இருக்கும். இந்த ராசியினரின் ஆற்றல்களும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வெகு நாட்களாக உடல் நிலையில் இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி நல்ல தேக ஆரோக்கியம் மேம்படும்.

நிதி சிக்கல்கள் அனைத்தும் நீங்கி பணவரவு ஏற்படும். புதிய வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த பலன்களும் கிடைக்கும். சட்ட விவகாரங்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அதிலும் வெற்றியை காண்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த திருமண வாழ்க்கை பாதிப்புகள் நீங்கி மகிழ்ச்சியை பெறுவீர்கள்.