எதிரிகள் பயமா? உடனே இங்கே செல்லுங்கள்!

0
103

சீர்காழியிலிருந்து பூம்புகார் போகும் வழியில் திருவெண்காடு என்ற இடத்தை தாண்டினால் சிறிது தொலைவில் இருக்கிறது சாயாவனம் கிராமம், சாலை ஓரத்திலேயே கோவில் இருக்கிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி வடகரை தலங்களில் இது 9வது தலம் என்று சொல்லப்படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது ஒன்பதாவது தேவாரத்தலம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. இந்த தளம் பழமையான சிவாலயம் காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு தலங்களுள் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது.

இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் இருக்கின்ற சாயாவனேஸ்வரர் ஐ வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த ஆசையை நிறைவேற்ற அவர் பூமிக்கு வந்திருக்கிறார். தாயை காணாத இந்திரன் அவர் சாய்காட்டில் இருப்பதை அறிந்து இந்த தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்ட இந்திரன் தன்னுடைய தாயார் நாள்தோறும் இந்த தளத்தை தரிசிக்கும் விதத்தில் இந்த கோயிலையே தன்னுடைய ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சி செய்தார் என்று சொல்லப்படுகிறது. கோவிலை இழுத்தவுடன் பார்வதி குயில் போல இனிமையாக கூறியிருக்கின்றார். ஆகவேதான் இந்த அம்மனுக்கு குயிலினம் இனி மொழியம்மை என்ற திருநாமம் உண்டானதாக சொல்லப்படுகிறது. உடனடியாக சிவன் அந்த இடத்தில் தோன்றி இந்திரா இந்த கோவிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபட வேண்டும் என்று நினைக்காமல் இங்கு வந்து வழிபட்டு நலம் பெற வேண்டுகிறேன் என்று அருள் புரிந்து இருக்கிறார்.

இந்த தளத்திற்கு தமிழில் திருச்சாய்க்காடு என்று பெயர் என்று சொல்லப்படுகிறது. சாய் என்றால் கோரை என்று பொருள் என்றும், பசுமையான கூரைகள் மிகுந்த பலமாக இருப்பதால் இந்த தளம் சாய்க்காடு என்று சொல்லப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோவில்களில் இந்த தளத்தில் இருக்கின்ற சாயாவனேஸ்வரர் ஆலயம் ஒன்று என்று சொல்லப்படுகிறது. மாடக்கோவில் என்றால் யானையால் புக இயலாத கோவில் என்று பொருளாகும். இல்லை என்று சொல்லாத இயற்கை நாயனார் பிறந்து முக்தி அடைந்த திருத்தலம் இது. இங்கு தனியே வைக்கப்பட்டிருக்கின்ற வில்லேந்திய வேலவர் பஞ்சலோக திருமேனி மிகவும் சிறப்புடையது என்று சொல்லப்படுகிறது.

நான்கு கால்களுடன் வில்லேந்திய மிக கம்பீரமான அனைவரும் உயர்ந்த மயிலும் திகழ்ந்து காண்போர் கண்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கிறது. இவை பலகாலம் முன்னர் கடலில் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தளத்தில் இறைவன் சுயம்புவாக அருள்பாலித்து வருகிறார் இந்த கோவிலுக்கு அருகில் பூம்புகார் காவல் தெய்வமாகிய சம்பங்கி அம்மன் கோவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சித்ரா பவுர்ணமி அன்று ஆரம்பித்து இந்திர விழா 21 நாட்கள் நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னம் அளிப்பு விழா, சித்திரை, வைகாசி ,உள்ளிட்ட மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர் பந்தல் மார்கழி மாதத்தில் இயற்பகை நாயனார்க்கு 5 நாட்கள் விழா எடுக்கப்படுகிறது. அதில் நான்காவது நாள் அவருக்கு இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீகம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு மிக விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. எதிரி பயம் இருப்பவர்கள் வில்லேந்திய வேலவரை வழிபட்டு சென்றால் நலம் தரும் என்று சொல்லப்படுகிறது.

Previous articleபக்காவாக அணியை தயார் செய்யும் ராகுல் டிராவிட்! நடுநடுங்கும் இலங்கை அணி!
Next articleஒரு வார்த்தை பிழையினால் தப்பிய குற்றவாளி! ஹைகோர்ட் வழங்கிய தண்டனை!