பெண்களை ஓசியில் பயணிக்கிறார்கள் என்று சொல்வதா? அப்போ நீங்க எப்படி பயணிக்கிறீங்க? பொன்முடி மீது பாய்ந்த முன்னாள் அமைச்சர்!

0
183

சமீப காலமாக தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது.

திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் தொடர்பாக இழிவாக பேசிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவருடைய பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அவர் இப்போது மட்டுமல்ல ஆற்றில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அவ்வப்போது இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையான நிகழ்வுதான்.

அதேபோல திமுகவின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் 1,000 வழங்கப்போவது எப்போது என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் தெரிவித்த பதில் விசித்திரமாக இருந்தது.

அதாவது சில்லரை மாற்றிக் கொண்டிருக்கிறோம் விரைவில் வழங்கி விடுவோம் ஒரே வீட்டில் தாய்க்கும் 1000 ரூபாய் மகளுக்கும் 1,000 ரூபாய் இன்று வழங்கும் ஒரே கட்சி திமுக தான் என்று தெரிவித்தது மேலும் சர்ச்சையை கிளப்பியது.

திமுகவின் முக்கிய தலைவராகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆகவும் அதே நேரத்தில் அமைச்சரவையில் அனைவருக்கும் மிக மூத்த அமைச்சராக விளங்கும் துரைமுருகன் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்தது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது.

இந்த நிலையில், தற்போது மற்றொரு முக்கிய அமைச்சரான பொன்முடி இது போன்ற ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்திருப்பது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதாவது பெண்கள் அனைவரும் பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? ஓசி அனைத்து பெண்களும் பேருந்தில் ஓசியில் செல்கிறீர்கள். இது யாரால் சாத்தியமானது? திமுக அரசால் சாத்தியமானது என்று தெரிவித்தது தமிழகத்தில் மிகப்பெரிய பிரளயத்தை கிளப்பியுள்ளது.

அவருடைய இந்த கருத்துக்கு பிறகு தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கே பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதையே இழிவாக கருதுகிறார்கள்.

அதோடு பெண்களுக்கு இலவசமாக பயணச்சீட்டு வழங்கினாலும் அதனை வாங்க மறுத்து நாங்கள் பணம் கொடுத்து தான் பயண சீட்டு பெறுவோம்.

இலவச பயணச்சீட்டு நாங்கள் கேட்டோமா? என்று நடத்துனர்களிடம் வாதம் செய்யும் நிகழ்வு ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைதலத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி தெரிவித்த கருத்து தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருப்பதாவது,

தீபாவளியை முன்னிட்டு முக்கிய பொருட்கள் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக விலை கட்டுப்படுத்த வேண்டும். மக்களை பாதிக்காத விதத்தில் ஆம்னி பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும். தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக அமைச்சர்களுக்கு சமீப காலமாக வாய்க்கொழுப்பு அதிகரித்துவிட்டது அவர்களும் மக்கள் வரிப்பணத்தில் தான் கார் வீடு ஓசி பணியாற்றல் என்று அனைத்தும் ஒசியாக அனுபவித்து வருகிறார்கள்.

பெண்களைப் பார்த்து ஓசி பயணம் என்று ஒரு அமைச்சர் வாய்க்கொழுப்பாக பேசுகிறார். இதனை தவிர்க்கவே இலவசம் என்று தெரிவிக்காமல் விலையில்லா என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டார். என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

அதிமுக ஆட்சிக் காலத்தில் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் யானை பாகனை போல் இருந்தார். இந்த ஆட்சியில் குதிரை ஓட்டியாக பயன்படுத்துகிறார்கள்.

திறமைமிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை திமுக அரசு நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும். நியாய விலை கடைகளில் தற்போது அரிசி கடத்தல் அதிகரித்திருக்கிறது. அந்தத் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணனின் கைகள் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்டவை அதிகமானால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது வரையில் சர்வாதிகாரியாக மாறவில்லை.

மதுரையில் மாநகராட்சி மேயர் இந்திராணி அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் சொல்வதை மட்டுமே கேட்கிறார். அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பாதாள சாக்கடை திட்டம் உட்பட எந்த பணிகளும் சரியாக நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

Previous articleகீர்த்தி சுரேஷ் பற்றி பறக்கும் மீம்கள்…. பொன்னியின் செல்வன் ரசிகர்கள் செய்யும் ட்ரோல்!
Next articleபா ரஞ்சித்- விக்ரம் படத்தின் கதாநாயகி இவர்தானா?… வெளியான லேட்டஸ்ட் தகவல்!