ஐடி ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கலாம்! எஸ்பிஐ வங்கி வழங்கும் அருமையான வாய்ப்பு!

0
196

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. எஸ்பிஐ சேவிங் அக்கவுண்ட், கடன், இன்சூரன்ஸ், டிரேடிங் அக்கவுண்ட் என பல வகையான வங்கி சேவைகளை வழங்குகிறது .ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.

அதோடு இந்த வங்கி வீட்டுக் கடன் தொழில் கடன் கார் கடன் உள்ளிட்ட பலவகையான கடன்களையும் வழங்குகிறது நீங்கள் இந்த வங்கியின் மூலமாக மாதாமாதம் நன்றாக சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் பெற முடியும். நீங்கள் ஒரு முறை சுமார் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் சில மாதங்களில் அதனை திரும்ப பெறுவதுடன் குறிப்பிட்ட முதலீடு மூலமாக நீங்கள் ஒரு சராசரி ஐடி ஊழியரின் சம்பளத்தை தர முடியும் என்பது தங்களுக்கு தெரியுமா?

வங்கி துறையில் ஒயிட் லேபிள் ஏடிஎம் அமைப்பது ஒரு சிறந்த வணிக வைப்பாக இருந்து வருகிறது. 10 லட்சம் இந்திய மக்களுக்கும் வெறும் 100 ஏடிஎம்கள் என்ற விதத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், ஒப்பிடும்போது இது சிறிய எண்ணிக்கையாக கருதப்படுகிறது.

நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய ஏடிஎம் நெட்வொர்க்கை இந்த வங்கி கொண்டுள்ளது. ஏடிஎம்களில் எண்ணிக்கையை அதிகரிக்க நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ ஆர்வமாக இருக்கின்ற தொழில் முனைவோருக்கு ஒரு அற்புதமான உரிமை வாய்ப்பை வழங்குகிறது. நீங்கள் எஸ்பிஐ ஏடிஎம் சென்டர் அமைப்பதற்கான உரிமம் பெற்று முதலீடு செய்வதன் மூலமாக தரமான சம்பாத்தியத்தை பெறலாம்.

எஸ்பிஐ பொறுத்த வரையில் ஏடிஎம் சென்டர் அமைப்பதற்கான ஒப்பந்தம் டாட்டா இன்டிகேஷ், முத்தூட் ஏடிஎம் மற்றும் இந்தியா ஒன் ஏடிஎம் உள்ளிட்டவற்றுடன் செய்யப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் எஸ்பிஐயின் ஏடிஎம் சென்டர் அமைக்க விரும்பினால் மேற்கண்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட்களை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்பிஐ இன் ஏ டி எம் சென்டர் அமைக்க குறைந்தபட்சம் தங்களுக்கு சொந்தமாக 50 முதல் 80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.

மற்ற வங்கிகளின் ஏடிஎம் உங்களுடைய இடத்திற்கு அருகில் இருந்தால் அதற்கும், உங்களுடைய இடத்திற்கும் இடையில் குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அதோடு சாலைகளின் செல்லும் பொது மக்களின் பார்வையில் எளிதில் தெரியுமாறு உங்களுடைய இடம் இருக்க வேண்டும்.

24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் ஒரு கிலோ வாட் எலெக்ட்ரிசிட்டி கனெக்சன் கட்டாயம் என்று சொல்லப்படுகிறது நீங்கள் ஏடிஎம் அமைக்க விரும்பும் உங்களுடைய இடம் செங்கல் சுவர்கள் மற்றும் காங்கிரட் ரூப்புடன் கூடிய நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும்.

ஏடிஎம் ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனைகளை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். முன்புறம் பார்க்கிங் செய்ய இடம் இருக்க வேண்டும். ஒரு வேலை நீங்கள் ஒரு கம்யூனிட்டியில் வசிக்கிறீர்கள் என்றால் வி சேட்டை இன்ஸ்டால் செய்ய நீங்கள் அசோசியேசன் போன்ற சங்கத்திடம் இருந்து என்ஓசி பெற வேண்டும்.

ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐடி உள்ளிட்ட அடையாளச் சான்றிதழ் ரேஷன், கார்டு, எலக்ட்ரிசிட்டி பில், உள்ளிட்ட முகவரி சான்றுகள், பேங்க் அக்கவுண்ட், பாஸ்புக் போட்டோ, இமெயில் ஐடி, போன் நம்பர், நிறுவனத்திற்கு தேவையான மற்ற ஆவணங்கள் மற்றும் படிவங்கள் நிதி ஆவணங்கள், ஜி எஸ் டி நம்பர் உள்ளிட்டவை தேவையான ஆவணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

எஸ்பிஐ ஏடிஎம் உரிமைக்கு நீங்கள் விண்ணப்பம் செய்து அனுமதி பெறும் போது 2 லட்சம் ரூபாய் செக்யூரிட்டி டெபாசிட் மற்றும் 3 லட்சத்தை ஒர்க்கிங் கேப்பிட்டலாகவும் செலுத்த வேண்டும் ஆக மொத்தம் முதலீடு 5 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும். நீங்கள் தங்களுடைய இடத்தில் அமைக்கும் ஏடிஎம்மில் நாள்தோறும் சராசரியாக 300 முதல் 500 வரை பரிவர்த்தனைகள் நடந்தால் மாத வருமானம் 45000 முதல் 90 ஆயிரம் வரையில் இருக்கலாம். ஒவ்வொரு கேஷ் ட்ரான்ஷாக்ஷனுக்கும் ரூபாய் 8 மற்றும் பேலன்ஸ் செக் மற்றும் பண்ட் டிரான்ஸ்பர் உள்ளிட்ட நான் கேஷ் ட்ரான்ஷாக்ஷனுக்கு ரூபாய் 2 பெறுவீர்கள்.

Previous articleபுதுவை ஜிப்மர் மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்ட செவிலியர் அதிகாரி பணியிடங்கள்! முழு விவரங்கள் இதோ!
Next articleதமிழகத்தில் நாளை நடைபெறுகிறது ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு! நீதிமன்றம் கடுமையான நிபந்தனைகள் விதிப்பு!