“ATM CARD”மோசடியை தடுக்க SBI புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது!

Photo of author

By Pavithra

அண்மைக்காலமாக ஏடிஎம் மூலம் பணம் கொள்ளை அடிக்கப்படுவது நடந்து கொண்டிருக்கிறது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சில உதவிக் குறிப்புகளை பகிர்ந்துள்ளது.மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற சில குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வெளியிட்டுள்ள பாதுகாப்பு குறிப்புகள்:

1.ஏடிஎம் கார்டை ஷாப்பிங் கடைகளில் ஸ்வைப் பண்ணும் போது,உங்கள் பாஸ்வேர்டை மறைத்து போட வேண்டும்.

2.ஏடிஎம் கடவுச்சொல் மற்றும் ஏடிஎம் அட்டையை முகம் தெரியாத நபர்களிடம் சொல்லக்கூடாது.

3.ஏடிஎம் கவரில் உங்கள் கடவுச்சொல்லை ஒருபோதும் எழுதி வைக்கக் கூடாது.

4.நெட் பங்கிங்,மொபைல் பேங்கிங் வைத்திருப்பவர்கள் உங்கள் ஏடிஎம் கடவுச்சொல்லை,அவற்றிற்கு பயன்படுத்தக் கூடாது.

5.ஏடிஎம்மில் பணம் எடுத்த பிறகு வருகின்ற பரிவர்த்தனை சீட்டை அந்த இடத்திலேயே தூக்கி எறியக்கூடாது.

6.ஏடிஎம்-ல் உங்கள் பரிவர்த்தனையை தொடங்கும் பொழுது அந்த ஏடிஎம் மையத்தில் கேமராக்கள் இருக்கின்றதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

7.ஏடிஎம் அல்லது POS இயந்திரத்தைப் பயன்படுத்தும் பொழுது கீபோர்டை கையாளுங்கள்.டச் போர்டை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

8.ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கும் பொழுது கடவுச்சொல்லை மறைத்து பணம் எடுக்க வேண்டும்.அதுமட்டுமின்றி முகம் தெரியாத நபர்களை பணம் எடுக்கும் பொழுது உங்களின் பக்கத்தில் நிற்பதை அனுமதிக்காதீர்கள்.உங்கள் பின்னாடி நிற்குமாறு வேண்டுகோள் விடுங்கள்.

9.ஏடிஎம்மில் பணம் எடுத்த பிறகு உங்கள் பரிவர்த்தனை முடிந்து விட்டது என்னும் மெசேஜ் வரும் வரையில் காத்திருங்கள்.உங்கள் transaction முழுவதுமாக கேன்சல் செய்த பின்னே அந்த இடத்தைவிட்டு நகரங்கள்,

10.மின்னஞ்சல்,SMS,அல்லது உங்கள் அட்டை அல்லது கடவுச்சொல் விவரங்களுக்கு மற்றவரை அழைக்க வேண்டாம்.