எஸ்பிஐ கிரெடிட் கார்டை நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? அப்படியென்றால் இதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!

Photo of author

By Sakthi

தற்போதுள்ள காலகட்டத்தில் துணிக்கடை முதல் நகைக்கடை வரையில் எங்கு சென்றாலும் எங்கே எந்த பொருள் வாங்கினாலும் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் பழக்கம் என்பது பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் மூலமாக வட்டி இல்லாமல் சுமார் 50 நாட்கள் வரையில் பணத்தை பயன்படுத்த கிரிடிட் கார்டு நடைமுறை இருந்து வருகிறது.

தொடக்கத்தில் குறைந்த சேவை கட்டணம் நடைமுறை இருந்த நிலையில், தற்போது பல்வேறு வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு கட்டணத்தை அதிகரித்து இருக்கிறது. இந்த வரிசையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி மற்றும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஸ்டேட் வங்கி என்று சொல்லப்படும் எஸ்பிஐயும் கிரெடிட் கார்டு நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.

இதன் அடிப்படையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி இ எம் ஐ பரிவர்த்தனைகள் மற்றும் வாடகை செலுத்துவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டதோடு சென்ற பதினைந்தாம் தேதி முதல் இது அமலுக்கு வந்திருக்கிறது. எப்படி இந்த கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது? எவ்வளவு அதிகரித்திருக்கிறது? என்று தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

தற்சமயம் மறையில் sbi கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கும் பொருட்களுக்கு இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு இதுவரையில் பிராசசிங் கட்டணமாக ரூபாய் 99 செலுத்த வேண்டும். அதாவது நீங்கள் இணையதளம் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு அதனை மாதத் தவணை முறைக்கு மாற்றுவதற்கு இதுவரையில் 99 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது வந்துள்ள புதிய நடைமுறையின் அடிப்படையில் இதுவரையில் இஎம்ஐ பிராசசிங் கட்டணம் 199 மற்றும் வரி வசூலிக்கப்படும் என்று எஸ் பி ஐ தெரிவித்திருக்கிறது.

இந்த நடைமுறை கடந்த 15ஆம் தேதி முதல் ஆனதுக்கு வந்திருப்பதால் இனி பயனர்களுக்கான செலவு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது இதோடு கிரெடிட் கார்டு மூலமாக வாடகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் சேவை கட்டணம் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.