தமிழகத்தின் ரேஷன் கடையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் அட்டை என்பது முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில் தமிழக அரசு ரேஷன் கடையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிதி உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவக்கூடிய வகையில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் ரேஷன் அட்டைதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும், வீட்டு வருமானம் குறிப்பிட்ட வரம்புக்கு கீழ் கொண்டிருக்க வேண்டும். பிற அரசு திட்டங்களின் பயனாளியாக இருக்கக் கூடாது. மேலும் திட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்க வேண்டும் என்பது அவசியமாக உள்ளது.
மேலும் இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம். இந்த திட்டத்திற்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் ரேஷன் திட்டத்தின் அதிகாரப்பூர்வ போர்டலில் முதலில் பார்வையிட வேண்டும். கேட்கப்படும் விவரங்களையும் விண்ணப்ப படிவத்தில் நிரப்புவது அவசியம் ,வருமானம் மற்றும் வசிப்பிடச் சான்று உட்பட தேவையான ஆவணங்கள் கேட்கப்படும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும் அதன் பிறகு ஆவணங்களை சரிபார்த்து உறுதிப்படுத்துதல் மற்றும் சலுகைகளை பெறுவதற்கான வழிமுறைகளுக்காக காத்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஒரு சில தகுதிகள் கொண்டிருப்பது அவசியம் விண்ணப்பதாரர்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அனைத்து ஆவணங்களும் சரியாகவும் அப்டேட்டாகவும் இருப்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ரேஷன் கார்டு நகல், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் கார்டு, அடையாளச் சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவை தேவைப்படுகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக உணவு தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றது. நிதி உதவி பெற்றுக் கொள்ளலாம் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் ரேஷன் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க இருக்கின்றது. முன்கூட்டியே இந்த திட்டம் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இத்திட்டம் தொடங்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. அதனால் ஜூன் மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் தேதி குறித்து தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாரெல்லாம் இந்த திட்டத்தை பெற முடியும்
கேஒய்சி சரி பார்ப்பை முடித்தால் மட்டுமே இந்த உதவியை பெற வாய்ப்புள்ளது. கேஒய்சி சரிபார்ப்பு என்பது ரேஷன் கார்டில் ஆதார் இணைப்பு, மொபைல் நம்பர் அப்டேட் மற்றும் கைரேகை சரிபார்ப்பு போன்றவை அடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பண உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு விதிமுறையாக இது பார்க்கப்படுகின்றது.