ஆசிரியர்கள் கழிப்பறையில் கேமரா:! பள்ளி நிர்வாகமே செய்த கீழ்த்தரமான செயல்! அதிரவைக்கும் காரணம்!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்,ஆசிரியர்கள் கழிப்பறையில்,பள்ளி நிர்வாகத்தினர் ரகசிய கேமரா வைத்து அதில் பதிவான காட்சிகளை வைத்து சம்பளம் கேட்கும் ஆசிரியர்களை,அதில் பதிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காட்டி சம்பளம் கொடுக்க முடியாது என்று மிரட்டி,அந்தப் பள்ளியின் நிர்வாக குழு செயலாளரே வேலை வாங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
இதனைத் தொடர்ந்து பொறுமையை இழந்த ஆசிரியர்கள்,பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்தனர்.புகாரின் பெயரில் பள்ளிக்கு சென்று சோதனை நடத்தியபோது அங்கு ஆசிரியர் பெண்மணிகள் கூறியதுபோல் கழிப்பறையில் எந்தவிதமான கேமரா ஆதாரமும் கிடைக்கவில்லை ஆனால் ஆண்கள் கழிப்பறையில் கேமரா வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கேமரா குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியபோது தற்போது கொலை குற்றங்கள் அதிக அளவில் நடப்பதால் அதனை தடுக்கும் விதமாக கண்காணிக்கும் பொருட்டு சிசிடிவி கேமரா வைத்திருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.அந்த பள்ளியின் செயலாளரை பிடித்து விசாரித்தபோது தான் அவர் செய்த கீழ்த்தரமான குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவரது வாக்குமூலத்தின்படி, கொரோனா பொது முடக்கத்தால்,ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத காரணத்தால் இவ்வாறு செய்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.மேலும் இந்தப் பள்ளி செயலாளரை அப்பள்ளி நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதோடு,பள்ளி செயலாளர் மற்றும் அவருக்கு துணைபோன அவரின் மகன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.