இது ஆசிரியர்களின் தலையாய கடமை! பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

ஊராட்சி ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதில் தமிழகத்தில் பள்ளிகளில் சேரா மாணவர்கள் எவருமில்லை என்ற நிலை உருவாக்கப்படவேண்டும். 86வது சட்டத் திருத்தத்தினடிப்படையில் தொடக்கக் கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவோம்.

5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களை 100% அரசு பள்ளிகளில் சேர்ப்பது தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியரின் தலையாய கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியின் சாதனைகள் வளர்ச்சி பல்வேறு வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கல்வி முறை பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தின் மூலமாக பெற்றோரிடம் எடுத்துக் கூறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தனியார் பள்ளிகளுக்கு நிகரான இணைய வழிபாட கற்பித்தல் தொடர்பாகவும் வாட்ஸ்அப் மூலமாகவும் ஆசிரியர் மாணவர் பாட பரிமாற்றங்கள் தொடர்பாகவும் பெற்றோர்களுக்கு விரிவாகவும் தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு வழங்கும் சிற்றுண்டி, கல்வி உதவித்தொகை, போன்ற திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கலாம்

. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலமாக தன்னார்வலர்கள் வீடு தேடி சென்று கண்டறிந்த 5 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உதவிட வேண்டும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றி இந்த கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.