Breaking News, Education, State

தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நியமனம்!! பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு… முழு விவரம் இதோ!!

Photo of author

By Madhu

தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் சுமார் 37,554 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 52 லட்சம் மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பணி ஓய்வு உட்பட பல்வேறு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. இவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்றல் கற்பித்தல் பணிகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் நடப்பு ஆண்டில் தற்காலிக ஆசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை அலுவலர்கள் இது குறித்து கூறுகையில் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அந்தந்த பள்ளி மேலாண்மை குழு மூலமாக நிரப்பிக் கொள்ள வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் மாணவர்களின் படிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்கும்.

கடந்த ஆண்டு நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால விடுப்பில் உள்ள அல்லது மகப்பேறு விடுமுறையில் சென்று ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய தலைமையாசிரியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்… முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

மாஸ்க் போட்டு தனியாக அமர்ந்த உதயநிதி.. மதுரை பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன!!