பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு விடும் எச்சரிக்கை :!

Photo of author

By Pavithra

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு விடும் எச்சரிக்கை :!

Pavithra

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு விடும் எச்சரிக்கை :!

கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் ,சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூரில் தமிழக அரசின் விலையில்லா நாட்டுக்கோழி வழங்கும் விழாவில் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று கலந்துகொண்டு 640 பயனாளர்களுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சிந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், எந்த ஒரு அரசு பள்ளியிலும் மாணவர்களிடம் ஒரு ரூபாய் கூட கட்டணம் வசூலிக்கப்தில்லை என்றும் கூறினார்.

அடுத்த மாதம் எழுதவிருக்கும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முடிவு எடுப்பார் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.