தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மறுபடியும் கனமழை பெய்ய ஆரம்பித்து இருக்கிறது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை செய்துவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ஆரம்பித்த மழை பிற்பகலில் மிதமாகவும் அதன்பிறகு அதிகமாகவும் பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. அதேபோல சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இன்றைய சூழ்நிலையில், கனமழையின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ,இராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டு இருக்கிறது, இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.