செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தடை:! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

0
132

செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தடை:! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

மத்திய அரசு,வருகின்ற செப்டம்பர் 21ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்று அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருந்தது.

மேலும்,இது கட்டாயம் இல்லை என்றும் அந்தந்த மாநிலங்களின் நோய் பரவலுக்கு ஏற்ப மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும், மேலும் பெற்றோர்கள் விரும்பினால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.இதைத் தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கும் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து மத்திய அரசு வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளிகள் திறக்க தடை என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

Previous articleதமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
Next articleஇனி இ-பாஸ் இல்லாமல் இந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்லலாம்.. உதவி ஆட்சியர் அறிவிப்பு!!