தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் இயல்பு நிலை மாறியுள்ளது. இந்த மழைக்கான முக்கிய காரணம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தமிழக கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் நேற்று இரவு இடி மின்னலோடு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை மாவட்ட ஆட்சியர் 12.11.2024 இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இது மட்டும் அல்லாமல் சென்னை வானிலை மையம் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.