விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன் !! கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

0
200
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம் ராசி – இன்றைய ராசிபலன் !! கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அற்புதமாக உள்ளது.

வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் கூடவே வந்து சேரும். உத்தியோகத்தில் சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்துடன் காணப்படுவார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதொப்பை இருக்கிறது என்று இனி கவலை வேண்டாம்! ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!
Next articleகற்றாழையை ஏன் நம் வீட்டில் வளர்க்க வேண்டும்! முழு விவரங்கள் இதோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here