விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
190
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அதி அற்புதமாக இருக்கும். கணவன் மனைவியுடைய சிறு சிறு குழப்பங்கள் இருந்தாலும் குடும்ப உறவுகளில் பாதிப்பு இருக்காது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகத்தில் ஒருவித குழப்பம் குடிகொள்ளும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில விஷயங்கள் எதிர்பாராமல் நடைபெறலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் பளிதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றி காண்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா ! இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! 
Next articleகாலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் போதும்! இந்த நோய்கள் அனைத்தும் உடனே சரியாகும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here