விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

0
104
#image_title

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சந்திராஷ்டமம் ராசியில் இருப்பதால் சில சங்கடமான சூழ்நிலைகளை காண்பீர்கள். முன்கோபம் அதிகரிக்கும் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையலாம்.

வருமானம் வந்து சேர்வதில் எதிர்பார்த்த கால தாமதம் வந்து சேரும். உத்தியோகத்தில் வீண் பலி வந்து சேரலாம் என்பதால் கவனம் தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மணவா மாணவிகள் கல்வியில் வெற்றிக்கான கடுமையாக பாடுபட வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வருவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும் என்றாலும் புதிய முதலீடுகளை யோசித்து செயல்படுவது நல்லது.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றி மறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani