விருச்சிகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!
விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் இன்று தீர்வு கிடைக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.
அரசியலில் இருக்கும் நண்பர்கள் தெளிந்த மனதோடு செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள்.
மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எதிர்பார்க்கும் காரியங்கள் அருமையாக நடைபெறும்.
இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.