விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுப்பும் மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்!!

0
144
#image_title

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுப்பும் மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுப்பும் மாலையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் வேலைகளை பொறுப்புடன் செயல்படுத்துவீர்கள் ஆனால் அதன் மூலம் மகிழ்ச்சிகளை பெறுவீர்கள். கணவன் மனைவியுடைய சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் ஆற்றலுடன் பயணிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் அபரிவிதமான வளர்ச்சி பெறுவார்கள். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சில செலவுகளை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்திகள் காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani