நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.களின் அலறல்! கூட்டம் தள்ளி போக காரணம் இதுதான்!

Photo of author

By Hasini

நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.களின் அலறல்! கூட்டம் தள்ளி போக காரணம் இதுதான்!

Hasini

Scream of female MPs in parliament! This is the reason why the crowd was pushed away!

நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.களின் அலறல்! கூட்டம் தள்ளி போக காரணம் இதுதான்!

நம் ஊரில் தான் எலி தொல்லை அதிகம் என்றால் வெளி நாடுகளில் கூட அதே நிலைதான் போல இருக்கிறது. நாடாளுமன்ற கூட்டத்திலேயே ஒரு எலி படாத பாடு படுத்தி இருக்கின்றது.

ஸ்பெயின் நாட்டின் அத்தலுசியாவில்  நாடாளுமன்ற கூட்டம் நேற்று நடந்து கொண்டு இருந்தது. எம்பிக்கள் சுசானா டைஸ் சை நியமிக்க கூறும் ஒரு முக்கியமான பிரச்சினையில் வாக்களிக்க அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.  அப்போது ஒரு எலி எம்பிக்களின் கால்களின் மீது ஏறி அங்கும் இங்கும் ஓடியது.

இதனால் எம்பிக்கள் கதறியபடி அங்குமிங்கும் ஓடினர். சிலர் கத்தி கூச்சலிட்டு வெளியேயும்  ஓடினார்கள். இதை தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் பின்னர் எலி  ஒரு வாராக வெளியேற்றப்பட்டது. அதன் பின் எம்பிக்கள் மீண்டும் கூடி நாடாளுமன்ற நடவடிக்கைகள் இயல்பாகவே மீண்டும் கூட்டம் தொடங்கினார்கள். அந்தலுசியன்  தன்னியக்க சமூகத்தின் செனட்டராக பெர்னாண்டோ லோபஸ் கிலுக்கு பதிலாக சுசானா டயஸை தேர்ந்து எடுத்தனர் . நாடாளுமன்றத்தில் ஒரு எலி  புகுந்து ஏற்படுத்திய விளைவுகளைபற்றி  ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.