முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான பல இடங்களில் தேடுதல் வேட்டை! இதுவரை 27 கோடி கண்டுபிடிப்பு!
அதிமுக கட்சியில் வருமானத்துக்கு அதிகமாக பல அமைச்சர்கள் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் காரணமாக தற்போது திமுக ஆட்சியில் ஒவ்வொருவர் மீதும், அவரவர் வீட்டிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மூலம் செய்து வருகின்றனர். தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வந்த நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில் உள்ள அவரது வீட்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவரது கிரானைட் ஃபேக்டரி, மாமனார் வீடு மற்றும் அவருக்கு நெருங்கிய நபர்கள் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு இரண்டு இடங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகளில், விஜயபாஸ்கருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன.
அங்கும் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர். டெய்லர்ஸ் ரோடு வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் பலர் ஒன்று திரண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி மற்றும் நிர்வாகிகளும் குவிந்தனர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.