இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டாச்சா? அப்போ இதுக்கெல்லாம் 50 சதவிகிதம் தான்!

Photo of author

By Hasini

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டாச்சா? அப்போ இதுக்கெல்லாம் 50 சதவிகிதம் தான்!

உலக அளவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது குறித்து நாம் அறிந்ததே. நோய் தொற்றின் காரணமாக பல மக்கள் பாதிக்கப் படுவதால் அரசுகள் பல ஆலோசனைகளை மேற்கொண்டு தற்போது அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப் படுகிறது.

கொரோனாவை பல வண்ணங்களில் பூஞ்சைகள் மக்களை பாதிப்பதாலும், அவர்கள் மூலம் தொற்று பரவுவதாலும், உயிர் மேல் ஆசை உள்ளவர்கள் அனைவரும் முந்திக்கொண்டு தடுப்பூசி போட்டு கொள்கிறார்கள். கையிருப்பு குறைவாக உள்ளதால் மட்டுமே அதில் தாமதங்கள் ஏற்பட்டு உள்ளன.

இந்நிலையில், அரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள உணவு விடுதிகள், பப்கள் மற்றும் மதுபான பார்களில் புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது,  கொரோனா தடுப்பூசியின் 2 வது டோஸ் எடுத்து கொண்டவர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது.  ஒரு டோஸ் எடுத்து கொண்டவர்களுக்கு 25% ம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு சலுகைகளால் வர்த்தகம் மேம்படுவதோடு, பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என பப் உரிமையாளர் கூறுகிறார்.

இதேபோன்று அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் முன்கள சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இதுபற்றி வணிக வளாக நிர்வாகியான கீதா அவர்கள் கூறும்பொழுது, முன்கள சுகாதார பணியாளர்களை பாராட்டும் வகையில், இலவச கார் நிறுத்தும் சேவைகள் மற்றும் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

அவற்றை பெறுவதற்கு அவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை மட்டும் காட்டினால் போதும் என்றும் கூறினார்.  தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் இதுபோன்று மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரிதும் பரவலாக வரவேற்பு பெற்றுள்ளன.