ஜோதிட விதிகள் படி ஜாதகத்தில் எந்த தசை நடைபெற்றாலும் தசை அல்லது புத்தி நாதன் சுக்கிரன், ராகு, அல்லது சனி, சுக்கிரன், உள்ளிட்டோரின் சம்பந்தம் உண்டாகும்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புண்டு.
இரண்டாவது திருமணம் யாருக்கெல்லாம் மரம் என்று கேட்டால்,
2வது திருமணத்தை பற்றி தெரிவிக்கக்கூடிய 7 மற்றும் 11 ஆம் இடம் சுப வலுப்பெற்றிருந்தால் இரண்டாவது திருமணம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். 11ம் அதிபதி கேந்திர திரிகோணத்தில் ஆட்சி மற்றும் உச்சம் பெற்று 7வது அதிபதியுடன் சம்பந்தம் பெற்றிருந்தால் இரண்டாவது மனைவியால் யோகமுண்டு.
1 5 9 மற்றும் 11ஆம் அதிபதி வலுப்பெற்று அவர்களின் தசை நடைபெற்றால் 2வது மனைவியால் பணம், புகழ், உள்ளிட்டவை கிடைக்கும் 7 11 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றால் இரண்டாவது திருமணத்திற்கு பிறகு பதவி, புகழ், அந்தஸ்து, கௌரவமான வாழ்க்கை, உள்ளிட்டவை கிடைப்பதற்கான வாய்ப்புண்டு.
லக்னம் ஏழாம் இடத்திற்கு சுக்கிரன் செவ்வாய் சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பவர்கள் 2வது திருமணத்தில் நிம்மதியாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல இரண்டாவது திருமணம் யாருக்கு சாபம் என்று கேட்டால், 11ம் இடம் அசுப வலுவுடன் இருந்தால் இரண்டாவது திருமண வாழ்க்கை கஷ்டத்தை கொடுக்கும். 7 மற்றும் 11 ஆம் அதிபதிகள் 3 மற்றும் 4ம் இடத்து சம்பந்தம் பெற்றிருந்தால் கிளி போல் மனைவி இருந்தாலும் குரங்கு போல ஒரு வைப்பாட்டி வைத்த கதைதான் என்று சொல்லப்படுகிறது.
11ம் அதிபதி 6 8 12-ம் இடத்திற்கு சம்பந்தம் பெற்று குரு பார்வை பெற்றால் முதல் மனைவி இருக்கும் போது 2வது திருமணம் செய்து 2வது மனைவியால் வம்பு வழக்குகள், கட்டப் பஞ்சாயத்துகள் என்று கடனாளியாக வாழ்ந்து வருவார்கள்.
சகிப்புத்தன்மை அற்றவர்கள் மற்றும் தவறான இன்பத்திற்காக 2வது வாழ்க்கையை தேடினால் அது குறிப்பிட்ட காலத்திற்கு மேல் கசந்துபோகும். ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் கேது செவ்வாய், கேது சம்பந்தம் இருப்பவர்கள் அனுசரித்துப் போகாமல் பல திருமணங்கள் செய்தால் அந்த திருமணம் சாபம் நிறைந்ததாக இருக்கும் என்கிறார்கள்.
உளவியல் ரீதியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சி செய்தால் வாழ்க்கைத்துணையின் இறப்பிற்க்காக மறுமணம் செய்யலாம் உண்மையில் வாழவே முடியாத நிலையில் பிரச்சனை இருந்தாலும் 2வது திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.