இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபையர் சுற்று!! இறுதிப் போட்டிக்கு செல்லப் போவது யார்?
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் சுற்று இன்று அதவாது 26ம் தேது இரவு குஜராத்தில் நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லவுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, குஜராத், உள்பட பத்து அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் 14 லீக் சுற்றுகளில் விளையாடியது. லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் புள்ளிப் பட்டியலில் அடுத்தடுத்து 4 இடிங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முதல் குவாலிபையர் சுற்றுக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றுக்கும் தகுதி பெறும்.
அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் முதல் குவாலிபையர் சுற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சென்னை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மறுபக்கம் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாம் குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த இரண்டாம் குவாலிபையர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை இன்று எதிர் கொள்கின்றது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
பேட்டிங், பந்வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் இரண்டு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் வெல்லப் போவது யார்? இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது