இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி பெறுமா இந்திய அணி? ஓவர் டென்ஷனில் ரசிகர்கள்!

Photo of author

By Sakthi

இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி பெறுமா இந்திய அணி? ஓவர் டென்ஷனில் ரசிகர்கள்!

Sakthi

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கின்ற மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது, இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனை தொடர்ந்து தென் ஆபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி நேற்று முன்தினம் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்களை எடுத்திருந்தது.

இந்த சூழ்நிலையில், 3-வது நாள் ஆட்டம் ஜனவரி மாதம் 5ம் தேதியான நேற்று மதியம் ஆரம்பமானது,ரஹானே 58 ரன்களிலும், புஜாரா 3 ரன்களிலும், ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகி ஏமாற்றம் கொடுத்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது, தென்ஆப்பிரிக்க அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. நேற்றைய ஆட்ட நேர இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை சேர்த்திருக்கிறது.

இந்த நிலையில்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை தீர்மானிக்க இந்தியாவிற்கு 8 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்காவுக்கு 122 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில், இன்றைய தினம் நடைபெறும் ஆட்டம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய மிகப்பெரிய இமாலய சாதனையை படைக்கும், அதேசமயம் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடர் சமநிலையை அடைந்து விடும்.