கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய முறையில் ரகசிய பரிகாரம்!!

Photo of author

By Selvarani

கணவன் மனைவி ஒற்றுமைக்கு எளிய முறையில் ரகசிய பரிகாரம்!!

கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உப்பு மற்றும் மிளகு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. தாந்திரீகம் மற்றும் மாந்திரீகம் போன்ற விஷயங்களில் உப்பு, மிளகு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. எவரையும் வசியம் செய்யும் சக்தி இந்தக் கல் உப்பு மற்றும் மிளகிற்கு நிச்சயம் உண்டு. இதனை எவ்வாறு எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

கணவன், மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் அளவற்ற நம்பிக்கை வைத்து இருக்க வேண்டும். நம்பிக்கையில் தான் அந்த உறவு மேலும் பலப்படும். இப்படி அல்லாமல் அடிக்கடி சண்டை, சச்சரவுகள், சந்தேகங்கள் போன்ற பிரச்சனையில் இருக்கும் கணவன் அல்லது மனைவி செய்ய வேண்டிய அற்புத எளிய பரிகாரம்.

உப்பு உணவில் மட்டுமல்ல நமது ஆன்மிக வாழ்விலும் மிக முக்கியமானது, விதையும் இல்லாமல் மண்ணும் இல்லாமல் கடலில் தோன்றும் இந்த அதிசய விளைச்சலை, வியங்காத ஞானிகளே இல்லை. இப்படிப்பட்ட சக்திவாய்ந்த கல் உப்பினை பயன்படுத்தி கணவன் மனைவியிடையே இருக்கும் வேறுபாட்டை அகற்றும் பரிகாரத்தை பார்க்கலாம்.

கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உப்பு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. தாந்திரீகம் மற்றும் மாந்திரீகம் போன்ற விஷயங்களில் உப்பு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. எவரையும் வசியம் செய்யும் சக்தி இந்தக் கல் உப்புக்கு நிச்சயம் உண்டு. ஒருவரை வசியம் செய்யவும், அவரை நம் வசப்படுத்திக் கொள்ளவும், நம்மீது அன்பு பெருக செய்யவும் உப்பு பெரும்பாலும் தாந்திரீகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கண்ணாடி டம்பளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு பூஜை அறையில் சென்று அமைதியாக அமர வேண்டும். 27 கல் உப்புகளை எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனை தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வேண்டும் என வேண்டிக் கொண்டு, முதலில் ஒவ்வொரு உப்பாக தண்ணீருக்குள் போட வேண்டும்.

இவற்றை போட்டு முடித்ததும் நன்றாக வேண்டிக் கொண்டு, இந்த தண்ணீரை ஆறு, குளம் ஆகியவற்றிலோ அல்லது கால்படாத இடத்திலோ சேர்த்து விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும்.